இரு மனைவிகளை ஏமாற்றி 3வது திருமணம் செய்ய முயன்ற காதல் மன்னன் .போலிசாா் விசாரணை.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பாண்டி மகன் தனபாலன்(26). இவர் கடந்த 5 வருடத்திற்கு முன் ராஜபாளையத்தில் தனியார் கிளினிக்கில் பணியாற்றி வந்தார்.அப்பொழுது ;.இதே கிளினிக்கில் உசிலம்பட்டி காளைத்தேவர் தெருவைச் சேர்ந்த  கவிதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் செவிலியராக பணியாற்றி வந்தார். ;.இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.கவிதா அழகில் மயங்கிய தனபாலன் யாருமில்லாத போது அவரை செல்போனில் ஆபசமாக வீடியோ எடுத்து தன்னை திருமணம் செய்யாவிட்டால் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளான்.இதனால் பயந்து போன கவிதா வேறு வழியில்லாமல் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்த தனபாலன் மேலூரில் தனது வீட்டில் வசித்து வந்துள்ளார்.திருமணமான ஆறு மாதத்தில் வரதட்சணை பிரச்சனை ஏற்ப்பட்டதால் கவிதா தனது  சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்துள்ளார்.கவிதா தந்தை காலமான நிலையில் தாய் செல்வி வேறுவழியின்றி தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.தற்போது இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் தனபாலன் உசிலம்பட்டியிலேயே ஒரு தனியார் கிளினிக்கில் பணியாற்றி வந்துள்ளார்.அங்கு உசிலம்பட்டியைச் சேர்ந்த அழகர் மகள் ஆர்த்தி(24) என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.முதல் திருமணத்தை மறைத்து இவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.இவரை மதுரையில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அங்கு குடிவைத்துள்ளார்.தனபாலன் பணியாற்றும் கிளினிக்கின் கிளை மதுரையில் உள்ளதால் அங்கு ட்யூட்டி போட்டதாக கூறி சென்றதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்நிலையில் தனபாலனுக்கு அடிக்கடி ராங் கால்கள் வர அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட கவிதா அவருடைய செல்போனை ஆராய்ந்ததில் அவர் இரண்டாவது திருமணம் செய்ததும் அவர் 11 மாத குழந்தை இருப்பதும் தற்போது அவருக்கும் தெரியாமல் தனபாலன் குடும்பத்தினர் 3வதாக பெண் பார்த்து திருமணம் முடிக்க இருப்பது தெரியவந்தது.அதிர்சியடைந்த கவிதா இது குறித்து உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தனபாலனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.இரு பெண்களை ஏமாற்றி 3வதாக திருமணம் செய்ய முயன்ற சம்பவம் உசிலம்பட்டிப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..