
பனைவிதைப்பில் மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியில் உள்ள நீர்நிலையான ஊருணி கரையில் 200 பனைவிதைகள் விதைக்கப்பட்டது.இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை மனிதர்கள் நலனுக்கான சமூக சேவைகளோடு இயற்கை நலனுக்காக பசுமை பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.தற்போதைய சூழலில் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு பூமி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் நிலையில் நாம் பசுமைப் பணிகளை அதிகம் மேற்கொண்டு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.அதன் ஒரு கட்டமாக மண்ணில் முளைத்தால் மரமாகவும் இல்லையேல் மண்ணில் நீர்பதம் ஏற்பட உரமாகவும் மாறக்கூடிய பனைவிதைகளை பல இடங்களில் விதைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் நீர்பிடிப்பு நிறைந்த ஊருணியில் நடைபெற்ற இந்த பனைவிதைப்பில் இயற்கை ஆர்வலர்கள் முரா.பாரதி, க.அசோக்குமார், க.கண்ணன், செ.பெரியதுரை மற்றும் பா.யோகேசன் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டனர்.பனைவிதைகள் சேகரித்து வழங்கியது மற்றும் களப்பணியில் ஈடுபட்டதற்காகவும் பங்கேற்றவர்களுக்கு அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.