எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை விமர்சனம் செய்வது மோடியின் குழந்தை தனத்தை காட்டுகிறது விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்.

பாஜக மற்றும் அதன் கூட்டணிகட்சி அரசின் ஒரு அங்கமாக ஜிஎஸ்டி கவுன்சில் மாறி இருக்கிறது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பேட்டி.பெட்ரோல், டீசல் – கேஸ் சிலிண்டர் மீதான விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டிக்கும் விதமாக., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பாக இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.தமிழக அரசின் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல்., மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட திருநகர் பகுதியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து கருப்புக்கொடி ஏந்தி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தியாவில் ஒரே நாளில் 2 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது காங்கிரஸ் கட்சியினருக்கு காய்ச்சல் வந்துவிட்டது என மோடி பேசியது குறித்த கேள்விக்கு.?எதிர்க் கட்சியின் கடமை., பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது அதை எடுத்துக் கூறுவது எதிர்க்கட்சியின் கடமை. இந்தக் கடமையை நக்கல் செய்வது மோடியின் பெருந்தன்மையை காட்டுகிறதா.? அல்லது அவருடைய குழந்தை தனத்தை காட்டுகிறதா.? எதிர்க்கட்சியின் பணி அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை எடுத்துக்கூறுவது., இந்தப் பணியை செய்ய கூடாது என்பது மோடியின் சர்வாதிகாரத்தை காட்டுகிறது.பெட்ரோல் டீசல் மீதான வரி GST வரம்பிற்குள் வராது என மத்திய நிதியமைச்சர் கூறி இது குறித்த கேள்விக்கு.?பாஜக மற்றும் அதன் கூட்டணிகட்சி அரசின் ஒரு அங்கமாக ஜிஎஸ்டி கவுன்சில் மாறி இருக்கிறது. மோடி அமித்ஷா அரசு இந்தியா முழுவதும் அகற்றப்பட்ட பின் உண்மையான பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட்டு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு நேர்மையான நிலை உருவாக்கப்படும்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாணவர் சேர்க்கை குறித்த கேள்விக்கு.?மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பூஷன் மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுதான் இடம் ஒதுக்க வேண்டும்., மாணவர் பயில்வதற்கான இடம் மற்றும் வசதிகளுக்கான நிதி யார் தருவார் என மாநில அரசு கேட்கிறது.மத்திய-மாநில அரசின் சுகாதாரத்துறை செயலாளர்கள் இருவரும் இணைந்து பேசி இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை முடிய உள்ளது அதற்குள் நல்லதொரு முடிவை உருவாக்க வேண்டும் என மத்திய-மாநில அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடவடிவமைப்பு 2026-ல் கட்டி முடிக்கப்படும். தற்போது மருத்துவமனை கட்டிட வடிவமைப்பு தயாராக உள்ளது.புதிய கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு.?தமிழகத்தில் இருதுருவ அரசியலாக மாறி பல நாட்கள் ஆகிறது., மூன்றாவது அணிக்கான பங்கேற்பு என்பது 15 சதவீதம் மட்டுமே., இரு அணிகளுக்கான போட்டியில் மக்களுடைய தேர்வு என்பது தெரியவில்லை., உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் உடைய தேர்வு மிக மிக முக்கியம்.இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக புதிய கட்சியை சார்ந்தவர்கள் வரலாம் கட்சி சாராத சுயேச்சை வேட்பாளராக புதிய கட்சி நிர்வாகிகள் வரலாம் ஜனநாயக ஆட்சியில் புதிதாக போட்டியிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்கலாம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..