அரசு பணிமனைகளில் தொடர்ச்சியாக திருடப்பட்டு வரும் அரசு பேருந்து பேட்டரிகள் – கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் தொடர் திருட்டுக்கள்.

மதுரையில் அரசுப்பேருந்துகள் நிறுத்தப்படும் பணிமனைகளில் இரவு நேரங்களில் பேருந்திகளில் பொருத்தப்படும் பேட்டரிகள் திருடப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், செக்கனூரணி மற்றும் திருமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட கல்லுப்பட்டி ஆகிய இடங்களிலுள்ள அரசு பணிமனைகளில் CCTV கேமரா இல்லாததை பயன்படுத்தி இரவு நேரங்களில் நிறுத்தப்படும் பேருந்துகளில் பொருத்தப்படிருக்கும் 14 பேட்டரிகள் திருடப்பட்டுள்ளன.! CCTV கேமராக்கள் இல்லாததையே இத்தொடர் திருட்டு சம்பவத்திற்கு காரணம் என பணிமனை தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்..!! மேலும் இதுக்குறித்து., போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..!!

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..