
குறைந்திருந்த கொரோனா பரவலின் தாக்கம் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அரசு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றது.இதன்படி இன்று தமிழகத்தில் இன்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.ஆனால் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி குறைந்த அளவே வந்துள்ளதால் தடுப்பூசி விரைவில் தீர்ந்து விட்டன.உசிலம்பட்டி மேலப்புதூர் முத்துப்பாண்டிபட்டி மாதரை ஆகிய கிராமங்களி;ல தடுப்பூசி போடவந்தவர்கள் திருப்பி அனுப்பபட்டனர்.இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஒவ்வொரு சிற்ப்பு முகாமிலும் 60 முதல் 70 நபர்கள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் மற்றவர்கள் திருப்பி அனுப்பபட்டதாகவும் கூறப்படுகிறது.ஒரு சில முகாம்களில் தடுப்பூசி மீண்டும் கொண்டு வரப்படும் எனக் கூறியதால் பொதுமக்கள் காத்துக்கிடந்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.