செங்கத்தில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தாலுக்கா செயலாளர் இலட்சுமணன் தலைமை நடைபெற்றதுதிரிபுரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தியும் முன்னணி கட்சி தலைவர்களை கடுமையாக தாக்கியுள்ளனரஇதில் தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்…இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் வீரபத்திரன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.புரட்சி நடராஜன்,விவசாய சங்கம் தாலுக்கா செயலாளர் காமராஜ்,டைஃபி தாலுக்கா செயலாளர் சி.எம்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்…