பி.கே.மூக்கையாத் தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சமாதியில் பல்வேறு கட்சியினரும் அஞ்சலி .

அகில இந்திய பார்வாட் பிளாக் கட்சித்தலைவர்களில் ஒருவரும் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.மூக்கையாத் தேவரின் 42வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது..மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சமாதியில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.அதிமுக சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் கட்சியினர் கலந்து கொண்டு மூக்கையாத்தேவர் மலர் வளையம் வைத்து சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா -அமமுக சார்பில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மகேந்திரன்-பாமக சார்பில் மாவட்டச்செயலாளர் முருகன் -பாரதிய ஜனதா சார்பில் மாவட்டச் செயலாளர் மொக்கராஜ் உள்ளிட்டோரும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..