
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு தாலுக்கா தானிப்பாடி பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் முருகன் இவர் கடந்த ஆண்டு கொரோனா வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் தற்பொழுது தலைமை காவலர் முருகனின் மனைவி ராஜாத்தி மூன்று குழந்தைகளுடன் மாமனார் மாமியாரின் எதிர் வீட்டில் வசித்து வருகிறார்இந்நிலையில் இவர்களுக்கு இடம் சம்மந்மந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது தலைமை காவலர் முருகன் உயிர் இழந்து விட்டதால் ஆதரவின்றி தன் குழந்தைகளுடன் இருந்து வந்துள்ளார் ராஜாத்தி இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மாமனார் பூண்டி மாமியார் பச்சையம்மாள் நாத்தனார் தனலட்சுமி உள்ளிட்ட மூவரும் தினம்தோறும் ராஜாத்தி மீது கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும்தற்பொழுது தலைமை காவலர் முருகனின் சகோதரி தனலட்சுமி வீட்டின் கேட்டின் மீது தாக்குதல் நடத்தும் காட்சியும் ராசாத்தியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளியே விடாமல் சித்தரவதை செய்து வருவதும் மாமியார் பச்சையம்மாள் மொட்டை மாடி மீது ஏறி கையில் அருவாள் வைத்துக்கொண்டு வெட்டிக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும்மாமனார் பூண்டி ராஜாத்தி மீது கற்களை வீசி தாக்கும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இது சம்பந்தமாக தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தொடர்ந்து தலைமை காவலர் முருகன் மனைவி மீது மூவரும் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்இந்நிலையில் தலைமை காவலர் மனைவி ராஜாத்தி மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதை கண்ட தானிப்பாடி காவல்துறையினர் மாமியார் பச்சையம்மாள் மற்றும் நாத்தனார் தனலட்சுமி இருவரையும் கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்மாமனார் மாமியார் நாத்தனார் உள்ளிட்ட மூன்று பேர் தலைமை காவலரின் மனைவியை சித்திரவதை செய்து கொலை மிரட்டல் விடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ராஜாத்தி மாமனார் பூண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
You must be logged in to post a comment.