உசிலம்பட்டி அரசுப்பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஒருவர் பலியானார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் அஜித் (25).இவர் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.இவர் வேலை நிமித்தமாக உசிலம்பட்டிக்கு வந்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.உசிலம்பட்டி மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் மீட்டிங் மகால் அருகே சென்ற போது தேனியிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.இதில் நிலைதடுமாறி அஜித் கீழே விழுந்தார்.படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா