
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம இளைஞர் குழுவினர் செளந்திர பாண்டியன் தலைமையில் மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் .அதன் விபரம் வருமாறுமதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் மரங்கள் மிகவும் குறைந்த அளவே உள்ளது. இதனால் கடந்த 12 வருடங்களாக மழை பொழிவும் போதிய அளவு இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக தன்னார்வலர்கள் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை பெரியகுளம், வாடிப்பட்டி போன்ற ஊர்களில் உள்ள நர்சரிகளில் அதிகம் விலைக்கு வாங்கி நட்டு பராமரித்து வருகிறார்கள், இதுகுறித்து உசிலம்பட்டி வனத் துறை சார்பாக தன்னார்வலர் இளைஞர்களுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மரக்கன்றுகள் மலிவு விலையில் கிடைக்கும் பட்சத்தில் உசிலம்பட்டி பகுதியில் அதிக அளவு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க படும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது உடன் சமூக ஆர்வலர் ராஜக்காபட்டி பால்ராஜ் கலந்து கொண்டார்
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.