
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கண்ணியம்பட்டி பெருமாள் கோவில் பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.வெங்காயம் நன்கு விளைச்சல் ஏற்ப்பட்டு; இன்னும் சில நாட்;களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் அப்பகுதியில கடந்த 4 நாட்களாக பெய்த மழையினால் செடியிலேயே வெங்காயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஏற்கனவே அதிக விளைச்சல் காரணமாக உரிய விலை கிடைக்காமல் வெங்காய விவசாயிகள் வேதனை உள்ள தற்போது மழையால் அறுவடை சமயத்தில் வெங்காயம் அழுகியதால் தங்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.அரசு இதுகுறித்து நடவடிக்கை தங்களுக்கு இழப்பீட்டுத்தொகை தொகை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.