உசிலம்பட்டியில் இறைச்சிகளின் விலை உயர்வால் நடுஆடியன்று வெறிச்சோடி காணப்பட்ட இறைச்சி கடைகள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஆடி மாதத்தில் முதல் ஆடி, நடு ஆடி, கடைசி ஆடி என்று 3ஆடி திருநாளையும் மக்கள் வீடுகளில் அசைவ விருந்துடன் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஆடி 15ம் தேதியை) நடு ஆடியாக கொண்டாடுகின்றனர். மேலும் கடந்த வாரம் வரை இறைச்சிகளின் விலை குறைவாக விற்பனை நடைபெற்ற நிலையில் திடீரென நடுஆடி தினத்தில் இறைச்சிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 1கிலோ ஆட்டு இறைச்சி 600ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 900ரூபாய்க்கும், கோழிக்கறி 150ரூபாயக்கு விற்பனையான நிலையில் 300ரூபாயக்கும், மீன்கள் 200 முதல் 300ரூபாய்க்கும் விற்பனை நடைபெற்று வருகிறது. இறைச்சிகளின் விலை வெகுவாக உயர்ந்துள்ளதால் விஷேச நாளில் மக்கள் இறைச்சிகள் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமில்லாமல் வெறிசசோடி காணப்படுகிறது. மேலும் இறைச்சிகள் விற்பனை நடைபெறாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

உசிலைசிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..