உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிட மமக முடிவு; நெல்லை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்..

தமிழகத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியினர் அதிகமான இடங்களில் போட்டியிட முடிவு செய்து நெல்லையில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் தலைவர் K S ரசூல் மைதின் தலைமையில் நடைபெற்றது. தமுமுக மாவட்ட செயலாளர் செய்யது ஜாவித்,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டவுண் ஜமால் துணைத் தலைவர் தேயிலை மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எதிர் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியினர் அதிகமான இடங்களில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மமக மாவட்ட துணை செயலாளர் ஏர்வாடி மாஹீன்,மமக மாவட்ட துணை செயலாளர் அ.காஜா,தமுமுக மாவட்ட துணை செயலாளர் டவுண் ரசூல்,தமுமுக மாவட்ட துணை செயலாளர் பெஸ்ட் ரசூல் தொண்டரணி செயலாளர் கம்புகடை சம்சுதீன், இளைஞர் அணி செயலாளர் ரியாசூர் ரஹ்மான் மருத்துவ சேவை அணி யூசுப் சுல்தான், ஊடக அணி பொருளாளர் செய்யது அப்துல் காதர், I P P பொருளாளர் ஞானியார்,விளையாட்டு அணி செயலாளர் ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..