
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியைச் சேர்ந்த வீரணத்தேவர் மகள் சாந்தி (44). இவருக்கு இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுதிறணாளி ஆவார்.இவருக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாத நிலையில் அப்பகுதியில் வீடுவீடாக பர்னிச்சர் வியாபாரம் செய்து வந்த மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சந்திரசேகர் (49) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாந்தியின் தந்தை இறந்து விட்ட நிலையில் தாயார் மட்டுமே உள்ளார்.சாந்தியின் சகோதரர்கள் 3 பேர் பல வருடங்களுக்கு முன்பு திருமணம் முடித்து மனைவியுடன் வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.சாந்தியின் திருமணம் அண்ணன்மார்களுக்கு தெரியாத நிலையில் தனது தாயார் வீட்டிலேயே சாந்தி கணவருடன் கடந்த 8மாதங்களாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திர சேகர் தனது மனைவி சாந்தியுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில் குடியேறினார். சந்திரசேகர் காரைக்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக சென்று பர்னிச்சர் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். வழக்கம் போல் பர்னிச்சர் பொருட்கள் விற்பனை செய்ய சென்ற சந்திரசேகர் கடந்த 3 மாதங்களாக வீடு திரும்பாமல் தலைமறைவானார்.வருவார் வருவார் என சாந்தி காரைக்குடியில் தனியாக வீட்டில் பசி பட்டினியுடன் காத்திருந்தார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சாந்தியிடம் விசாரணை நடத்தி போலீசார் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டி கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஆட்டோவில் தனது தாய் வீட்டிற்கு சென்ற சாந்தியை அவரது 3சகோதரர்கள் மறைமுகமாக திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் வீட்டிற்குள் சாந்தியை அனுமதிக்க மறுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர். எங்கு செல்வதென்று திகைத்தபோன சாந்தி தனது தாயார் கருப்பாயி உடன் உசிலம்பட்டியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டு தலைமைறவான கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனது தாயுடன் சேர்த்து வைக்க கோரினார். உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
காதல் கணவனும் கைவிட்டு காதலால் அண்ணன்மார்களும் கைவிட்டு நிர்கதியாகியுள்ள மாற்றுத்திறனாளி பெண் கதறிய சம்பவம் அப்பகுதியில் இருந்தோரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.