Home செய்திகள் கோடை வெயிலை அடித்து நொறுக்கிய தொடர் கன மழை! அவதியும் மகிழ்ச்சியும் கலந்து அனுபவிக்கும் தமிழ்நாடு மக்கள்..

கோடை வெயிலை அடித்து நொறுக்கிய தொடர் கன மழை! அவதியும் மகிழ்ச்சியும் கலந்து அனுபவிக்கும் தமிழ்நாடு மக்கள்..

by Askar

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால், இன்று முதல் (வியாழக்கிழமை) 23-ந்தேதி வரை தமிழகத்தில் தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.இதில் குறிப்பாக இன்று விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும், 21-ந் தேதி விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை மறுநாள் (22-ந்தேதி) தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.அதேபோல், 23-ந்தேதி தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும், இன்று மற்றும் நாளை தேனி, தென்காசி. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகன மழை பெய்யவுள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை அடைமழை பெய்தது. இதன் காரணமாக தென்மாவட்டங்கள் அதிக அளவு மழையை பெற்றுள்ளது.இதுவரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். கடந்த 24 மணி நேரத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பால், 15 கால்நடைகள் இறந்துள்ளதுடன், ஏழு வீடுகள் சேதம் அடைந்துள்ளன.கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று, கடல் அலை குறித்தும் பொது மக்களுக்கு கடல் சீற்றம் பற்றியும் எச்சரிக்கை தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களிலுள்ள சுமார் 2 கோடி கைப்பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை தகவல்கள் குறுஞ்செய்திகளாக அனுப்பப்பட்டு உள்ளன.கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 9 குழுக்கள் கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் என்று அந்த மாவட்டத்தின் கலெக்டர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார். மாநில மற்றும் மாவட்ட செயல்பாட்டு மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.இதன்மூலம், மழை பாதிப்புகள் குறித்த விவரங்கள் உடனுக்குடன் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com