Home செய்திகள் முதல்வர் , விளையாட்டுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிலம்ப மாணவர்கள் நன்றி : சிலம்பத்தை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரிக்கை

முதல்வர் , விளையாட்டுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிலம்ப மாணவர்கள் நன்றி : சிலம்பத்தை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரிக்கை

by mohan

திருச்சியில் சர்வதேச தரத்தில் பயிற்சியளிக்க ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்படும் என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் உறுதியளித்துள்ளதை தொடர்ந்து சிலம்பம் திருச்சி மாவட்ட சங்கம், திருச்சி உலக இளைஞர் சிலம்ப சம்மேளனம் மற்றும் இந்திய சிலம்ப கோர்வை கழக சிலம்ப மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கிராம்ப்புறங்களைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு அனைத்து விளையாட்டுகளில் அதிக திறன் இருக்கும் போதும் முறையான பயிற்சி கிடைக்காததால் பெரிய அளவில் சாதிக்க முடிவதில்லை அதில் வெகு சிலர் மட்டுமே கடும் பயிற்சி சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்பதில் உள்ள சிக்கல்களை கடந்து சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பிரகாசித்து வருகின்றனர்.

தற்பொழுது தமிழக அரசின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி தொடங்க இருப்பது எங்களை போன்று விளையாட்டில் சாதிக்க இருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்..தற்போது ஒலிம்பிக் போட்டியின் தொடர் ஓட்டத்திற்கு இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள ஆரோக்கியராஜீவ், நாகநாதன் பாண்டி, தனலட்சுமி, சுபா மற்றும் ரேவதி அவர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரியபடுத்தினர்…இவர்களில் ஆரோக்கியராஜீவ், தனலட்சுமி மற்றும் சுபா ஆகியோர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு மிகுந்த பெருமையாகவும் உற்சாகத்தையும் கொடுக்கின்றது என்று கூறினார்கள்.

மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தையும் தேசிய அளவிலான விளையாட்டுகளில் கொண்டு வந்தால் எங்களை போன்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.இதில் தனது முன்னோர்கள் காலத்தில் இருந்தே இலவசமாக சிலம்பம் கற்று தந்ததை அடுத்து தானும் கடந்த 41 ஆண்டுகளாக இலவசமாகவே சிலம்பம் கற்று தரும் சிலம்பம் திருச்சி மாவட்ட சங்க செயலாளர் மாஸ்டர் கலைச்சுடர்மணி எம்.ஜெயக்குமார் அவர்களும் உலக சிலம்ப இளைஞர் துணை தலைவர் மற்றும் இந்திய சிலம்ப கோர்வை தலைவர் இரா.மோகன், சிலம்பத்தில் பல உலக சாதனைகள் மற்றும் சர்வதேச சிலம்ப விளையாட்டு வீராங்கனை மோ.பி.சுகித்தா, பயிற்சியாளர் எம்.சிவராமன் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன அவர்களுக்கு நன்றியை தெரிய படுத்தினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com