
உசிலம்பட்டியில் விலையில்லா அரிசி,பருப்பு,முட்டை வாங்க வந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் பாட சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு முதல் அலை, இரண்டாம் அலை என உருவெடுத்து அதிகரித்த காரணத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் பாடவகுப்புகள் நடத்தி வருகின்றன.அரசு சார்பி;ல் கல்வித் தொலைக்காட்சி தொடக்கபபட்டு அதன் வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதி விலையில்லா பாடபுத்தகத்தோடு, விலையில்லா அரிசி,பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிட்குட்பட்ட வண்ணாரப்பேட்டை தெருவில் அரசு உதவிபெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியிலும் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்று பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் பாடங்களை தொலைபேசி மூலம் நடத்தி வீட்டுப்பாடங்களை எழுதச் சொல்லியுள்ளனர்.பள்ளிக் குழந்தைகளும் ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் பள்ளிகள் திறக்காமல் இருந்தாலும் அரசு உத்தரவுப்படி மாணவர்கள் நலன்கருதி அரசால் வழங்கக்கூடிய விலையில்லா அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு ஒவ்வொரு பள்ளிக்குழந்தையின் பெற்றோர்களுக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதனையறிந்த மாணவ மாணவியரும் தங்கள் பெற்றோருடன் பாடப்புத்தகங்களுடன் வந்து ஆசிரியர்களிடம் பாடம் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டனர். பாடம் தொடர்பான பள்ளிக குழந்தைகளின் ஆர்வம் ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது. பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பள்ளிக்குழந்தைகள் வர வேண்டிய அவசியமில்லையென்றாலும் ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க வேண்டுமென அடம்பிடித்து தங்கள் பிள்ளைகள் வந்ததாக பொற்றோர்கள் தெரிவித்தனர்.மேலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி சேனலில் எந்த நேரத்தில் எந்த பாடம், எந்த கிழமைகளில் பாடம் கற்பிக்கப்படுகிறது என்பது குறித்தும் துண்டு நோட்டிசும் மாணவர்களுக்கு வழங்கி கல்வி தொலைக்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கஷ்டப்பட்டு படிப்பதை விட இஷ்டப்பட்டு படிப்பது சிறந்து என்பதை விலையில்லா பொருட்கள் வாங்க வந்த பள்ளிக்குழந்தைகள் தங்கள் பாட சந்தேகங்களையும் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்தி கொண்ட சம்பவமே இதற்கு சாட்சியாகும்
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.