
மதுரைசி.எம்.ஆர்.ரோடு பகுதியில் இரண்டு ரேஷன் கடைகள் அமைந்திருக்கிறதுஇந்த இரண்டு ரேஷன் கடைகளிலும், காமராஜபுரம் சின்ன கண்மாய் பகுதி மக்கள் ரேஷன் பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம்.இங்கே ரேஷன் கார்டுகளுக்கு, இலவசமாக அரிசியை வாங்கி செல்லும் மக்களிடம் குறைந்த அளவு பணத்திற்கு அந்த அரிசியை பெற்றுக்கொள்ளும் வியாபாரிகள் அதை மூட்டை மூட்டையாக லாரிகளில் கடத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை இருக்கிறது.ரேஷன் கடைகளில் சில்லறையாக ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகளை வைத்து அவர்களுக்கு கிடைக்கும் அரிசியை வியாபாரிகள் சொற்ப விலை கொடுத்து அவர்களிடமிருந்து பெற்று கொண்டு ரேஷன் அரிசியை மொத்தமாக கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.அது போக ரேஷன் கடைகாரர்களிடமும் அரிசியை பெற்று அங்கிருந்து அரிசியை கடத்தி வேறு இடத்திற்கு கொண்டு சென்று ரேஷன் அரிசியை விற்கிறார்கள் என, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த வித பலனும் இல்லை. எனவே, இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.