
மதுரை மாநகராட்சி. ஆணையர் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் இணைந்து மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் இதில் 76 வது வார்டுக்கு உட்பட்ட வானமாமலை நகர், துரைசாமி நகர், வேல்முருகன் நகர் ஆகிய பகுதிகளில் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் இருந்த குப்பைகளை அகற்றி தற்போது தெருக்கள் மற்றும் சாலைகள் தூய்மையாக காட்சியளிக்கின்றது. இந்த பணியை மேற்கொண்ட மதுரை மாநகராட்சிக்கு நன்றிகள். ஆனால் ஒரு சிலர் பொறுப்பற்ற முறையில் மிகவும் அலட்சியமாக மாநகராட்சியினரினரின் உழைப்பை உதாசீனப்படுத்தும் வகையில் சாலைகளில்மீண்டும் குப்பைகள் மற்றும்உணவு கழிவுகளை கொட்டுவது உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகரை தூய்மையாக வைத்திருக்க மாநகராட்சியுடன் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும். மாசில்லா மதுரை ஆக மாறும் என்பதே நிதர்சனம்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.