
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வாழ்வாதாரம் பாதித்த திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நரிக்குறவர்களுக்கு, சென்னை-எண்ணூர் டான்பாஸ்கோ இளையோர் நல்வளர்ச்சி மையம் சார்பில் அரிசி, மளிகை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்விற்கு சென்னை டான்பாஸ்கோ பாதிரியார் கிறிஸ்டி அவர்கள் தலைமை வகித்தார். செய்யாறு பங்கு தந்தை லாரன்ஸ், ஆசியன் மெடிகல் அகாடமி நிறுவனர் பீ. ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியை ம. மகாலட்சுமி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக, திரைப்பட பாடலாசிரியை கு. உமாதேவி அவர்கள் பங்கேற்று, திருநங்கைகளின் வாழ்க்கை செயல்பாடுகளை விவரித்து, அத்யாவசிய பொருட்களை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், ஊராட்சி செயலாளர் எம்.பி. வெங்கடேசன், எக்ஸ்னோரா செயலாளர் கு. சதானந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் பூங்குயில் பதிப்பக ஆசிரியர் டி.எல். சிவக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.