
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தனியார் ட்ரஸ்ட் நிறுவனமான சீவெல்பர் ட்ரஸ்ட் இயங்கி வருகிறது. இந்த தனியார் ட்ரஸ்ட் மூலம் ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு இரத்தம் வழங்கி இரத்ததான சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமணைக்கு சீவெல்பர் ட்ரஸ்ட் மூலம் இலவசமாக ரூ.50ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஜிசன் செறிவூட்டும் கருவிகளை ட்ரஸ்ட் நிறுவனர் பாலாஜி வட்டார வளர்ச்சி மருத்துவர் சுசிலாவிடம் வழங்கினார். அதனைதொடர்ந்து உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமணைக்கு ரூ.1.50லட்சம் மதிப்பிலான இரண்டு ஆக்ஜிசன் செறிவூட்டும் கருவிகளை மருத்துவமணை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது. சீவெல்பர் ட்ரஸ்ட் எனும் தனியார் ட்ரஸ்ட் நிறுவனம் தொடர்ந்து அரசு மருத்துவமணைகளுக்கு ஆக்ஜிசன் செறிவூட்டும் கருவிகளை வழங்கி வருவதால் பலரும் பாராட்டுகின்றனர்.
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.