ரேஷன் கடை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்; சுரண்டை கூட்டுறவு பண்டகசாலை கூட்டத்தில் தீர்மானம்..

கொரோனா காலத்தில் பணியாற்றிய ரேஷன் கடை பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என சுரண்டை கூட்டுறவு பண்டகசாலை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் எஸ் கே டி ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஆ. கணேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் சரவணகுமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் ஆகியோருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. சுரண்டை கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான மண்ணெண்ணெய் பங்கில் கூட்டுறவு பண்டகசாலைக்கு நிரந்தர அலுவலகம் கட்டவும், காலியாக உள்ள ரேஷன் கடை பணியாளர் பணியிடங்களை நிரப்பவும்,கொரோனா காலத்தில் மக்களின் தேவைக்காக தமிழக அரசோடு இணைந்து அரசின் கொரோனா நிவாரண நிதி மற்றும் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்த அனைத்து ரேஷன் கடை பணியாளர்களையும் முன் களப்பணியாளர்களாக அறிவிக்கவும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் நிவாரண நிதி வழங்கவும் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் இயக்குனர்கள் அண்ணாமலை, ஆறுமுகம், சங்கர், சங்கரேஸ்வரன், மாரியப்பன், முத்து, வசந்தி, தேனம்மாள் தங்கராஜ், ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..