அடிப்படை வசதி குறைபாடு குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்;தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிதண்ணீர், தெருவிளக்கு, குப்பைகளை அகற்றுதல் மற்றும் சுகாதாரக் கேடுகள் சம்பந்தமான புகார்களை ஊராட்சி ஒன்றியத்திற்கு தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் குடிதண்ணீர், தெருவிளக்கு, குப்பைகளை அகற்றுதல் மற்றும் சுகாதாரக் கேடுகள் சம்பந்தமான புகார்களை ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணிற்கு அலுவலக நாட்களில், அலுவலக நேரங்களில் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் குறித்த குறைபாடுகளை பின்வரும் தொலைபேசி எண்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 04633 – 270124, கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசிஎண் – 04634 – 240428, கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 04633 – 240250, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 04633 – 250223, குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 04632 – 251234, மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 04636 – 290384, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 04636 – 222398, செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 04633 – 233058, தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 04633 – 280318, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 04636 – 241327 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கோபால சுந்தரராஜ் இ.ஆ.ப செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்