உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்களை போலிசார் அகற்றியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்துநிலையம் முன் பகுதியில் தேவர்சிலை வளாகம் உள்ளது.இவ்வளாகத்தின் அருகில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கொடியுடன் கூடிய கொடிக்கம்பத்தை காவல்துறை அனுமதியுடன் நட்டு வைத்துள்ளனர்.இந்நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் அப்பகுதியில் கொடிக்கம்பம் நடப்பட்டது.காவல்துறை அனுமதி பெறாமல் நடப்பட்டதால் சில அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர்.இதனால் அப்பகுதியில் பதட்டம்  உருவானது.இதனையடுத்து போலிசார் மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படமாலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்த அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்றினாஅனைத்து அரசியல் கட்சியினரும் அப்பகுதியில் குவிந்ததால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலை சிந்தனியா