குடியரசு தினத்தை முன்னிட்டு கீழக்கரையில் இரத்தான முகாம்…..

இந்திய நாட்டில் 72 ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கீழக்கரை அலைன்ஸ் மக்கள் நல்லிணக்கம் அமைப்பு, இராமநாதபுரம் ஏ.ஆர்.மருத்துவமனை இணைந்து நடத்திய தொடர் இரத்ததான முகாம் கீழக்கரை மிஷின் மருத்துவமனையிலும், இராமநாதபுரம் ஏ.ஆர்.மருத்துவமனையிலும் 26, 27 மற்றும் 28 தேதிகளில் தொடர் இரத்ததான முகாம் நடைபெற்றது.

கீழக்கரையில் முதல் நாள் நடைபெற்ற முகாமை அலைன்ஸ் மக்கள் நல்லிணக்க அமைப்பு தலைவர் ஹபீப் முகம்மது தொடங்கி வைத்தார். அலைன்ஸ் மக்கள் நல்லிணக்க அமைப்பு செயலாளர் சபீக், இணைச்செயலாளர் மருத்துவர் செய்யது இப்ராகீம், இராமநாதபுரம் ஏ.ஆர்.மருத்துவமனை மருத்துவர் ராசிகா, கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர் பைசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாம் ஏற்பாடுகளை அலைன்ஸ் மக்கள் நல்லிணக்க அமைப்பு செயற்குழு உறுப்பினர் அஹமது ஹாலித் உள்பட அலைன்ஸ் மக்கள் நல்லிணக்க அமைப்பு நகர், மாவட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.