
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் திருக்கோவில் ஒள்ளது. இந்த கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கழக அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன் ஆலோசனையின் படி செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சௌந்திரபாண்டியன் தலைமையில் தியாக தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சிந்துபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், மண்டல போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்ரமணியன், பால்பாண்டி மற்றும் கோயில் நிர்வாக குழு சார்பில் காசிமாயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து கருமாத்தூர் அருகே உள்ள பூசாரிபட்டி கிராமத்தில் உள்ள காசிவிஸ்வநாதன் கோவிலிலும் சின்னம்மா நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாண்டியன் ஏற்பாட்டில் மாவட்ட துணை செயலாளர் பிரபு முன்னிலையில் நடைபெற்றது. இதில் மூணாண்டிபட்டி கிளை செயலாளர் தர்மராஜா, பன்னியான் கிளை செயலாளர் பிரேம்குமர், கேசவன்பட்டி கிளை செயலாளர் பெரியமாயன், கோட்டையூர் கிளை செயலாளர் அழகர், பூச்சம்பட்டி கிளை செயலாளர் கோட்டைச்சாமி, வடக்கம்பட்டி கிளை செயலாளர் காசி உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.