
திருவண்ணா மலை மாவட்டம் செங்கம் அடுத்த கல் லாத்தூர் சேர்ந்த ராஜ் குமார் (25). இவனுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக இவன் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை நிலாவூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று உள்ளான்.இது குறித்து சிறுமியின் தந்தை ஏலகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிறுமி மற்றும் ராஜ்குமாரை செங்கை மாவட்டம் மதுராந்தகம் பஸ் நிலையத்தில் கைது செய்தனர். பின்பு ராஜ்குமார் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
கேஎம்.வாரியார்
You must be logged in to post a comment.