கீழக்கரையில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 100 க்கு மேற்பட்ட. போர்கள் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியும், மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருத்தும் மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலின் மாண்பையும், நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எவ்வித தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழி ஏற்போம். என்ற முழக்கத்தோடு கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை கடற்கரை பகுதியில் இருந்து ஜும்மா பள்ளி, பீசா பேக்கரி, இந்து பஜார், வழியாக கீழக்கரை நகராட்சி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

இப்பேரணியில் இந்த பேரணியை கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் ரஜபுதீன் முன்னிலை வகித்தார். கல்லூரி பேராசிரியர்களும், வருவாய் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இப் பேரணிக்கு கீழக்கரை காவல் சார்பு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்றைய செய்தி நிரந்தர வரலாறு கீழை நியூஸ்