நம்உரிமை ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் 300 மரக்கன்றுகள் இலவசமாக திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.DSP அண்ணாத்துரை மற்றும் திருவண்ணாமலை காவல் ஆய்வாளர்கள் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர் .

இந்நிகழ்ச்சியில் ஓட்டுநர் சங்க மாநில தலைவர் சாகுல் ஹமீது  மற்றும் மாநில பொதுச்செயலாளர் வினோத் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் மோகன் ஆனந்த் அஜித் மற்றும் சக ஓட்டுனர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்