Home செய்திகள் ஜெர்மன் உயிரியலாளரும், இயற்கையியலாளரும், ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் (Ernst Haeckel, பெப்ரவரி 16, 1834 — ஆகஸ்ட் 9, 1919), பிறந்தநாள் இன்று.

ஜெர்மன் உயிரியலாளரும், இயற்கையியலாளரும், ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் (Ernst Haeckel, பெப்ரவரி 16, 1834 — ஆகஸ்ட் 9, 1919), பிறந்தநாள் இன்று.

by mohan

ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் பிப்ரவரி 16 அன்று ஜெர்மனில் உள்ள போட்ஸ்டாம்(Potsdam) என்ற நகரில் பிறந்தார்.1857ல் மருத்துவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றார்.இவர் பெயர் பெற்ற ஜேர்மன் உயிரியலாளரும், இயற்கையியலாளரும், மருத்துவரும், பேராசிரியரும், ஓவியரும் ஆவார். இவர் டார்வினைப் பின்பற்றுபவர், இயற்கை விஞ்ஞானத்தின் பொருள் முதல்வாதத்தை கடைபிடிப்பவர். இனவகை தோற்ற வளர்ச்சிக்கும் (phylogenesis), தனி உயிரின் தோற்ற வளர்ச்சிக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றிய உயிர் மரபு ரீதியான விதியை வரையறுத்தார். (ontogenesis) இவர் பல இனங்களைக் கண்டுபிடித்து, விளக்கி அவற்றுக்கு பெயர்களும் இட்டுள்ளார். எல்லா உயிரினங்களையும் உட்படுத்திய இனவழிப் படிவரிசை (genealogical tree) ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார். அத்துடன் உயிரியல் தொடர்பான பல சொற்களையும் இவர் அறிமுகப்படுத்தினார். இவர் இயற்கை விஞ்ஞானத்தில் ஓரு பிற்போக்கான கருத்தோட்டமான சோஷல் டார்வினீயத்தின் நிறுனரும், கொள்கைவாதியும் ஆவர்.1907 ஆம் ஆண்டில் கைசர் வில்ஹெல்ம் II மற்றும் 1908 ஆம் ஆண்டில் லண்டனின் லின்னியன் சொசைட்டி ஆஃப் டார்வின்-வாலஸ் பதக்கம் ஆகியவற்றால் ஹேக்கலுக்கு பெருமை சேர்க்கிறது. ஆகஸ்ட் 9, 1919 தனது 85ம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

தகவல்: இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!