Home செய்திகள் தன்னுடைய ஆட்சி முடியபோகிறது என்பதால் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை. அவரது முகத்திலும் கண்களிலும் தோல்வி பயம் தெரிகிறது!- திருச்சியில் தெறிக்க விட்ட முதலமைச்சர்..

தன்னுடைய ஆட்சி முடியபோகிறது என்பதால் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை. அவரது முகத்திலும் கண்களிலும் தோல்வி பயம் தெரிகிறது!- திருச்சியில் தெறிக்க விட்ட முதலமைச்சர்..

by Askar

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சியில் சிறுகனூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அருண் நேருவுக்கும் வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி என்றாலே திருப்பு முனைதான். இந்த தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்று இந்தியாவிற்கே நாம் திருப்பு முனையை ஏற்படுத்த போகிறோம். புதிய வரலாற்றை நாம் எழுத போகிறோம்.

பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தி இந்தியா கூட்டணியை ஒன்றியத்தில் அமரவை வைப்பதற்காக நடக்கக்கூடிய தேர்தல்தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். தேர்தல் என்பதால் பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். இல்லை என்றால் வெளிநாட்டில்தான் இருப்பார்

தன்னுடைய ஆட்சி முடியபோகிறது என்பதால் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை. அவரது முகத்திலும் கண்களிலும் தோல்வி பயம் தெரிகிறது. நான் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. முடியாது.

தேர்தலுக்கு தேர்தல் பா.ஜ.க நடத்தும் கபட நாடகத்தை தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களும் இனி நம்ப மாட்டார்கள். உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்

இப்போது நடைபெறும் தேர்தல் யுத்தம் இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.க-வுக்குமானது அல்ல. பாசிச பா.ஜ.கவுக்கும் மக்களுக்கும் நடைபெறும் யுத்தம். இந்த தேர்தல் யுத்தத்தில் வெற்றிப் பெறப் போகிறவர்கள் மக்கள்தான். பாசிச பா.ஜ.க மண்ணோடு மண்ணாகும்.

10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் நடந்த ஊழல்கள் ஒன்றா இரண்டா?. அதற்கு இமாலய எடுத்துக்காட்டுதான் தேர்தல் பத்திரங்கள் ஊழல். இந்த ஊழல்கள் குறித்து நாம் மட்டுமல்ல இந்திய மக்களே கேள்வி கேட்டாளும் அவர்களிடம் பதில் இல்லை.

PM Cares என்ற பெயரில் பா.ஜ.க மிகப் பெரிய ஊழல் செய்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஊழல் ஊழலை முறையாக விசாரித்து அம்பலபடுத்தப்படும்.

தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு அமைச்சர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துவிட்டுதான் இங்கு வந்து இருக்கிறேன். நம்முடைய பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கி இருக்கிறோம். இது நிச்சயம் குடியரசு தலைவர் மாளிகையை அடையும்

பெங்களூருவில் வெடித்த குண்டு தமிழர்கள் வைத்த குண்டு என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் பேசும் அளவிற்கு பா.ஜ.க வெறுப்பு தீயை வளர்த்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் என்ன வன்முறையாளர்களா?. பயங்கர வாதிகளா?

ஒரு ரூபாய் கொடுக்கும் எங்களுக்கு ஏன் 29 பைசா கொடுக்கிறீர்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இதை கேட்டால் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சை என்று ஆணவமாக கூறுகிறார். இந்த ஆணவம் தான் பா.ஜ.கவை அழிக்கபோகிறது. மக்களுக்கு கொடுப்பது பிச்சை அல்ல. அது அவர்களது உரிமை.

மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு உதவுவது கடமை. அதைத்தான் தி.மு.க அரசு சரியாக செய்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்யும் அந்த கூட்டத்தில் போய் பிச்சை என்று நீங்க பேசுவீங்களா?. ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா?. மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்கு நிதியமைச்சர் பதவி? என தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!