Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளருடன் வெல்ஃபேர் கட்சி மாநில நிர்வாகிகள் சந்திப்பு.!

தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளருடன் வெல்ஃபேர் கட்சி மாநில நிர்வாகிகள் சந்திப்பு.!

by ஆசிரியர்

பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கும் வெல்ஃபேர் கட்சியின் மாநில துணைத்தலைவர் கவி மணிமாறன் மீது Crpc 110 -ன் கீழ் பிரமான பத்திரம் பெற்று அவரை சரித்திர பதிவு குற்றவாளியாக மாற்ற சித்தரிக்கும் ஆனைமலை காவல் நிலையம் மற்றும் பொள்ளாச்சி வருவாய் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும்,  கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முஸ்லிம் இளைஞர்களிடம் வலுக்கட்டாயமாக Crpc 110 -ன் கீழ் பிரமான பத்திரம் பெற்று ஒரு வருட காலத்திற்கு எவ்வித சமூகப் பணிகளிலும் ஈடுபடாமல் தடுத்தும் தொடர் அச்சுறுத்தல் ஏற்படுத்தியும் வருகின்ற கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினரின் மேற்படி தவறான போக்கை தடுத்து நிறுத்த கோரியும் இன்று தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் மற்றும் உதவி செயலாளர் பிரசாத் ஆகியோரை வெல்ஃபேர் கட்சி மாநிலத் தலைவர் கே எஸ் அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் ம முகமது கவுஸ், செயலாளர் Adv மதி அம்பேத்கர் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com