இராமநாதபுரத்தில் “சாதித்துக் காட்டுவோம்” சிறப்பு பயிற்சி முகாம்..

இராமநாதபுரத்தில் வரும் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று சாதித்து காட்டுவோம் என்ற மாணவர்களுக்கான சிறப்பு பயிறிசி முகாம் நடைபெற உள்ளது.  இம்முகாம் இராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெற உள்ளது.  இம்முகாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பாக நடத்தப்படுகிறது.

இம்முகாமில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கம் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?? தேர்வை பயமின்றி எதிர்கொள்வது எப்படி? தேர்வுக்கு தயார் ஆவது எப்படி போன்ற பயிற்சிகள் அளிக்ப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி மாலை 04.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு முக்கிய வினாக்கள் அடங்கிய தொகுப்பும் கொடுக்கப்பட உள்ளது. இப்பயிற்சி அனுபவமிக்க பயிற்சியாளர்கள் மூலமாக நடத்தப்படுவது குறிப்பிடதக்கதாகும்.

இந்நிகழ்வு பற்றிய மேல் விபரங்களுக்கு 95243 41884 /  94880 05800 / 79049 08973 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.