Home அறிவிப்புகள் கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நாளை நடத்தும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தடுப்பு நிகழ்ச்சியில் ADSP வெள்ளத்துரை சிறப்புரை..

கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நாளை நடத்தும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தடுப்பு நிகழ்ச்சியில் ADSP வெள்ளத்துரை சிறப்புரை..

by ஆசிரியர்

கீழக்கரை நகரில் கடந்த சில ஆண்டுகளாக வாகன போக்குவரத்து நெரிசல் சொல்லொண்ணா துயரத்தை பொதுமக்களுக்கு தந்து வருகிறது. கீழக்கரையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வாகன பெருக்கத்தால் சாலைகள் முழுமையும் எந்நேரமும் வாகனங்கள் நிரம்பி இருக்கிறது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படும் வாகன ஓட்டிகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்களால் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.

இது சம்பந்தமாக கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நாளை நடத்தும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தடுப்பு நிகழ்ச்சி விழிப்புணர்வு கூட்டம் நாளை 25/01/18 வியாழன் கிழமை மாலை 4.00 மணியளவில் ஹூசைனியா மஹாலில் கீழக்கரை கோட்டம் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் திலகவதி வரவேற்புரை ஆற்றுகின்றார். முகம்மது சதக் பாலிடெக்னிக் பேராசிரியர். முனைவர் அலாவுதீன், கீழக்கரை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் செய்யது ஜகுபர் சாகுனி, கீழக்கரை கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளர் முகம்மது அஜிஹர், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர். முனைவர். வெள்ளைத்துரை சிறப்புரை ஆற்றுகின்றார். நிகழ்ச்சியை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹூசைன் தொகுத்து வழங்குகின்றார். கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செந்தில் முருகன் நன்றியுரை ஆற்றுகின்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கீழக்கரை காவல் துறை மற்றும் கீழக்கரை பொதுநல அமைப்புகள் செய்கின்றார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!