Home செய்திகள் கலக்கும் தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலமாக 3 வது இடம்..

கலக்கும் தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலமாக 3 வது இடம்..

by Askar

புத்தாக்க நிறுவனங்களுக்கு (வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு) உகந்த சூழலை உருவாக்கித் தருவதில் மிகச் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன.மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (டி.பி.ஐ.ஐ.டி.) துறை இந்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், சந்தைப்படுத்துதலை எளிமையாக்குதல், நிதி ஆதரவு திட்டங்கள் உள்பட 25 காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மிகச் சிறநத மாநிலங்கள், சிறந்த மாநிலங்கள், முதன்மை மாநிலங்கள், ஆர்வம் காட்டும் மாநிலங்கள், முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது.33 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதில் பங்கேற்றுள்ளன.மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் குஜராத் தொடர்ந்து 4-வது முறையாகவும், கர்நாடகா 2-வது ஆண்டாகவும் இடம் பிடித்து உள்ளன.2022-ம் ஆண்டுக்கான இந்த தர வரிசைப் பட்டியலை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-மிக சிறந்த மாநிலங்கள்-குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம்.சிறந்த மாநிலங்கள்-மகாராஷ்டிரா , ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, அருணாசல பிரதேசம், மேகாலயா.முதன்மை மாநிலங்கள்-ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், திரிபுரா.ஆர்வம் காட்டும் மாநிலங்கள்-பீகார், அரியானா, அந்தமான்-நிகோபார் தீவுகள், நாகாலாந்து.முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள்-சத்தீஸ்கர், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!