Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யா பேரரசு-12
(கி.பி661-750)

முஆவியா (ரலி) அவர்களின் தந்தை அபூசுஃபியான் அவர்கள்.
தாயார் ஹிந்தா அவர்கள்.

ஹிந்தா அவர்கள் அபூசுஃபியான் அவர்களை திருமணம் செய்யும் முன்பே வேறொருவரை
திருமணம் செய்திருந்தார்.

ஒருநாள் வீட்டிற்கு ஹிந்தா அவர்கள் தாமதமாக வரவே முதல் கணவர் ஹிந்தா அம்மையாரை சந்தேகப்பட்டார்.

அதனால் கோபித்துக் கொண்டு தனது தந்தையான
மக்காவில் சிறப்புவாய்ந்த தலைவரான உத்பா வீட்டிற்கு வந்துவிட்டார்.

உத்பா அவர்களிடம் விபறம் சொல்லப்பட, தனது மகளின் பத்தினித் தனத்தை நிரூபிக்க அன்றைய மக்காவில் புகழ்பெற்ற ஜோதிடப்பெண்மணி
வீட்டிற்கு தனது மகளையும் வேலைக்காரியையும்
அனுப்பி வைத்தார்
தனது மருமகனுக்கும்
தகவல் தந்து உண்மையை அறிந்து கொள் என வரவழைத்தார்.

அன்றைய அரபு மக்கள் ஜோதிடர்கள் சொல்வதை நம்பி ஏற்றுக்கொண்டனர்.

ஹிந்தாவுடன் வேலைக்காரியை கண்ட ஜோதிடப்பெண்மணி, அவளை உனக்கு இங்கு வேலையில்லை என அனுப்பிவிட்டு,

ஹிந்தாவின் முதல் கணவரிடம் உன் மனைவி தூய்மையானவர்
அவர் ஒரு அரசரை பெற்றெடுப்பார் என்று சொல்ல, கணவன் தனது மனவியிடம் மன்னிப்பு கோரினார்.

அதனை மறுத்த ஹிந்தா தனது தந்தைவீட்டிற்கு சென்று நடந்ததை தந்தையிடம் கூறி, முதல் கணவரை விவாகரத்து செய்தார்.

பிறகு அபூசுஃபியான் அவர்களை ஹிந்தா அம்மையார் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு பிறந்தவர்களே
முஆவியா (ரலி) அவர்கள்.

பிறக்கும் போதே ஒரு அரசைரைப்போல அவர்கள் இருந்தார்கள்.
வளரவளர நல்ல உயரமும், நல்ல வெண்மை நிறமும்,
பெரிய தலையும், நீண்ட கைகளும், கொண்டு பெரிய அரசரைப் போல இருந்தார்கள்.

அவர்கள் பிற்காலத்தில் ஒரு பேரரசை நிர்மாணிப்பார்கள்
என்ற கருத்து இன்று உண்மையாகி உமைய்யா பேரரசாக
விரிந்து நிற்கின்றது.

முஆவியா (ரலி) அவர்களின் பாட்டனார் உமைய்யா அவர்களின் பெயராலேயே இது உமையாக்களின் அரசாக அடையாளப்
படுத்தப்படுகிறது.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் , எழுதப்படிக்க தெரிந்த முஆவியா (ரலி) அவர்களுக்கு வெளிநாடுகளுக்கு கடிதம் எழுதுகிற பொறுப்பை வழங்கினார்கள்.

பிறகு ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டில் ஏராளமான வெளிநாட்டு தூதர்கள் மதினாவிற்கு
வந்த போது அவர்களை வரவேற்று,
அவர்கள் நாடு திரும்பும்வரை அவர்களை கவனித்து பராமரிக்கும் பொறுப்பையும் வழங்கினார்கள்.

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு தாமதமாக இஸ்லாத்திற்கு முஆவியா(ரலி) அவர்களின் முழுக்குடும்பமும் வந்தாலும், பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
அவர்களிடம் மிகுந்த நெருக்கத்தையும்,
அந்தஸ்தையும், பெற்று இருந்தார்கள்
முஆவியா (ரலி) அவர்கள்.

என்ற பழைய வரலாற்றை கூறி முடித்தார் அந்த மிகவும் வயதான மூத்த ஆலிம் பெருமகனார்.

முஆவியா (ரலி) அவர்கள் அந்த ஆலிமை நோக்கி நடந்தார்கள்.
பள்ளிவாசலே பெரும் அமைதியாக நடக்க போவதை பார்த்து கொண்டு இருந்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

 

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com