புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது 22.600 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் ..

மதுரை மாநகர் D2-செல்லூர் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முருகன் நேற்று (01.02.2019) கல்லூரியின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனையாளர்களை சோதனை செய்த போது மதுரை மாவட்டம் பரவையைச் சேர்ந்த முருகன் 47/19, த/பெ.மாடசாமி, பரவை, மதுரை என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 22.600 கிலோ கிராம் புகையிலை (TOBACCO) பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்