Home செய்திகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று கனிமொழி சொல்லி வருவது கனிமொழியின் காணல் நீர் கனவாகத்தான் போகும் தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று கனிமொழி சொல்லி வருவது கனிமொழியின் காணல் நீர் கனவாகத்தான் போகும் தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

by mohan

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு  வந்தார்‌. தொடர்ந்து, தூத்துக்குடியில் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கோவில்பட்டி,சென்னை, மதுரை, வேளாங்கண்ணி, எர்ணாகுளம் உள்ளிட்ட 14 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளை கொடியசைத்து இயக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் S.P. சண்முகநாதன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் P. சின்னப்பன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வி.பி.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், குடிமராமத்து பணி திட்டத்தின் மூலம் குளங்களை தூர்வார அரசு உத்தரவு பிறப்பித்து  பணிகள் நடைபெற்று வருகிறது. திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் ஆங்காங்கே நீர் நிலைகள், குளம், குட்டைகள் தூர்வாரப்படும்போது கிடைக்கும் வண்டல் மண்ணையும் விவசாயிகளுக்கு சொந்த இடத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நமது மாவட்டத்தில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் 500 குளங்கள் தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை முடிந்து, வடகிழக்கு மருவமழை முன்னதாகவே தொடங்குவதற்கான அறிகுறிகள் உள்ளன. ஒவ்வொரு துறை வாரியாக பல்வேறு சிறப்பான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் போக்குவரத்து துறையின் சார்பில் பழைய பேருந்து மாற்றி புதிய பேருந்துகளை இயக்கும் விதமாக இன்று தூத்துக்குடி மாவட்ட பணிமனைக்கென்று வழங்கப்பட்ட 14புதிய பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளது.

தொலைதூர பயணிகளுக்கு இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும். திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய பேருந்து இயக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் அதிகம் இருப்பதைக் சுட்டிக்காட்டி அணையிலிருந்து கார்கால சாகுபடிக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்துள்ளோம்.கடலில் ஆற்று நீர் வீணாக கலப்பதை தடுக்க புன்னகாயலில் தடுப்பணை கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சாத்தான்குளம், விளாத்திகுளம்  உப்போடை  நீர் வழித் தடத்தில் ஆங்காங்கே தடுப்பணை அமைத்து நீரை சேமிக்கும் பணி திட்டம் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் ஸ்டாலினாக இருந்தாலும், கனிமொழியாக இருந்தாலும் அவர்கள் லட்சியம் ஆட்சி, அதிகாரம் இது ஒன்று தான். ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்களே தவிர மக்கள் பணியை செய்யவில்லை. அதிமுகவை குறை கூறுவதை விட்டுவிட்டு திமுக மக்கள் பணியை செய்ய நேர்ந்தால் நல்லது.

டி.ராஜா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அதிமுக. இன்று திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு அவர்கள்தான் திமுகவுக்கு எடுபிடியாக செயல்படுகிறார்கள். அதிமுக யாருக்கும் என்றைக்கும் எடுபிடியாக செயல்பட வேண்டிய அவசியமில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டு திமுகவின் எடுபிடியாக செயல்படும் அவர்கள் இத்தகைய விமர்சனங்களை தெரிவிக்க வேண்டாம். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காமல் போனதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்றார்.

பேட்டியின் போது அவருடன் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான S.P. சண்முகநாதன், அதிமுக  அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், சி.த. செல்லப்பாண்டியன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் P. சின்னப்பன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!