Home செய்திகள் மேல்புழுதியூர் கூட்டுறவு சங்கத்துக்கு கூட்டுறவு சார்பதிவாளர் பாராட்டு!

மேல்புழுதியூர் கூட்டுறவு சங்கத்துக்கு கூட்டுறவு சார்பதிவாளர் பாராட்டு!

by Askar

மேல்புழுதியூர் கூட்டுறவு சங்கத்துக்கு கூட்டுறவு சார்பதிவாளர் பாராட்டு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா மேல்புழுதியூர் கூட்டுறவு சங்கத்துக்கு கூட்டுறவு சார்பதிவாளர் பொதுவினியோக திட்டம் சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார். அரசின் மே மாத இலவச பொருட்களான அரிசி பருப்பு சர்க்கரை சமையல் எண்ணை ஆகிய நிவாரண பொருட்களை பயனாளிகளுக்கு கூட்டுறவு கடைகளில் பந்தல் போட்டு பொது மக்கள் உட்கார சேர் குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தி சமூக இடைவெளியுடன் பொது மக்கள் பொருட்களை வாங்கும் வகையில் முன்னதாக டோக்கன் வழங்கி ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் இது சம்மந்தமாக மேல்புழுதியூர் கூட்டுறவு சங்க தலைவர் சந்திராதனஞ்செயன் செயலாளர் செல்வராஜ் கூறுகையில் செங்கம் ஒன்றியம் மேல்புழுதியூர் கூட்டுறவு சங்கம் மூலம் 5892 குடும்ப அட்டை தார்கள் பயன் பெருகிறார்கள் முழு நேர மற்றும் பகுதி நேர ரேசன் கடைகள் என 12 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலம் தமிழக அரசு அறிவித்த ஏப்ரல் மாத நிவாரண உதவிகளான அரிசி பருப்பு சர்க்கரை சமையல் எண்ணை மற்றும் 1000 ரூபாய் ஆகியவை மாவட்ட கலெக்டர் கந்தசாமி அறிவிப்பின்படி வீடுவீடாக வேன் மூலம் எடுத்துச்சென்று மாவட்ட மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் வழிகாட்டுதலுடன் சரக துணை பதிவாளர் ஆரோக்கியராஜ் கூட்டுறவு சார் பதிவாளர் சரவணன் ஆகியோர் ஆலோசணையுடன் வழங்கப்பட்டது. அதே போல் மே மாத தொகுப்பு பொருட்கள் வழங்கிட 12 கடைகளிலும் பந்தல் அமைத்து சேர் குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தி ஊராட்சி மூலம் கிருமிநாசினி மருந்து தெளித்து சமூக இடை வெளியுடன் பொருட்கள் வழங்கப்பட்டது. இதை பார்வையிட்ட சார்பதிவாளர் சரவணன் சிறப்பான ஏற்பாடுகளுக்கான பாராட்டுகளை தெறிவித்துள்ளார். இந்த சிறப்பான ஏற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மேல்புழுதியூர் சே.முருகன் அந்தனுர் கலைசெல்வி வெங்கடேசன் பக்கிரிபாளையம் மல்லிகாமுனியன் மேல்செங்கம் சத்தியா ஞானவேல் ஆகியோருக்கும் உடன் இருந்து செயல்பட்ட சங்க இயக்குனர்கள் ரவிசந்திரன் கணபதி மனோகரன் விஜயாகோவிந்தன் சக்திவேல் ரவி ரமேஷ் சசிகலா முருகன் சின்னையன் ஆகியோருக்கும் சங்க அலுவலர்கள் கூட்டுறவு கடை விற்பணையாளர்கள் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேம். இவ்வாறு சங்க தலைவர் சந்திராதனஞ்செயன் செயலாளர் செல்வராஜ் தெரிவித்தனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!