திருமங்கலம் பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசல் மற்றும் ஆக்கிரமிப்புகள்..

திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வெளியேறும் போது இரண்டு பேருந்துகள் ஒரே நேரத்தில் வெளியேறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல், பொதுமக்கள் மற்றும் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அலட்சியமான முறையில் இயங்கும் போக்குவரத்து மற்றும் ஓட்டுநர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படும் பட்சத்திலே இது போன்ற தவறுதல்கள் சரியாகும்.

அதே போல் பஸ் ஸ்டாண்டில் ஆக்ரமிப்புகளால் பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்