மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் அ.இ.அ.தி.மு.க மாநகர் அம்மா பேரவை சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜு மற்றும் வருவாய்,பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, நீதிபதி, மாணிக்கம்,பெரியபுல்லான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், தமிழரசன்,மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், முத்துக்குமார், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பகுதி செயலாளர்கள் முத்து இருளாண்டி, மாரிசாமி, கோச்சடை ராஜேந்திரன், வட்ட செயலாளர்கள் முனிச்சாலை சரவணன், மணிகண்டன், மலைச்சாமி, புதூர் மெடிக்கல் மோகன், கோழிக்கடை மாரிமுத்து, பி.ஆ.ர்.சி.கிருஷ்ணமூர்த்தி, சொக்கலிங்க நகர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.