கம்பத்தில் கொரானா விழிப்புணர்வு மக்கள் சேவைக்கான விருது வழங்கப்பட்டது

தேனி மாவட்டம் கொரோனா கால கட்டத்தில் மக்களுக்கு சேவை செய்தற்கு சமூக ஆர்வலர் கம்பம் சாதிக் என்பவர்க்கு சிறந்த மக்கள் சேவை விருது கிடைத்தது. கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் மகத்தான பணியை மிகச் சிறப்பாக செய்து வரும் கம்பம் நகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமுக சேவகர்களுக்கு பாராட்டும் விதமாக கம்பம் வின்னர் ஸ்போர்ட்ஸ் மற்றும் மியூசிக் ஸ்டார் சார்பாக சிறப்பு கேடயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்  சின்னக்கண்ணு  தலைமை பொறுப்பை ஏற்று பரிசுகளை வழங்கினார். உடன் கம்பம் காவல் ஆய்வாளர் சிலைமணி , போக்குவரத்து ஆய்வாளர் தட்சணமுர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர்கள் திவான்  , ஜாகிர் உசேன், நேதாஜி அறக்கட்டளை பஞ்சு ராஜா மற்றும் கவிஞர் பரதன் .விழா ஏற்பட்டார்கள் வின்னர் பேட்ஸ் அலீம் , மியூசிக் ஸ்டார் செந்தில், தம்பி ஆசிக் , தம்பி பாண்டி கலந்து கொண்டனா்.

 சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..