கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மாசா சமூகநல அமைப்பு இணைந்து கபசுர குடிநீர் விநியோகம்…

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மாசா சமூக நல சங்கம் இணைந்து கீழக்கரை நகர் பகுதியில் கபசரகுடிநீர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு ரோட்டரி சங்கத்தின் பட்டயத்தலைவர் டாக்டர் அலாவுதீன் முன்னிலையில், ரோட்டரி சங்கம் தலைவர் மூர் ஹசனுதீன்,  மாஸா சங்கத்தலைவர் அகமது முகைதீன் தலைமையில் நடைபெற்றது.. இதில் ரோட்டரி சங்கம் செயலாளர் ஜெ.எபன் பிரவின் குமார், பொருளாளர் சுப்பிரமணியன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசீக்தீன், டாக்டர் சுந்தரம், முன்னாள் செயலாளர் ஹஸன், செல்வநாரயணன், பிர்தோஸ்கான், தவமணி, சிவகார்த்திக், மாஸா சங்கத்தின் சார்பில் மக்துமியா மேல்நிலை பள்ளி தாளாளர் இப்திகார் ஹஸன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு