தஞ்சாவூர், மார்ச் 31, 2024: டெல்டா பிராந்தியத்தின் மிகப்பெரிய பல்நோக்கு மருத்துவமனையான, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை, இப்தார் விருந்தை நடத்தியது. இதில் ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் தங்கள் நோன்பை முடிக்கும் அந்தி நேர உணவு விருந்து இடம்பெற்றது. இப்பகுதியில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பன்னிரண்டாவது முறையாக இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். அனைத்து பங்கேற்பாளர் களுக்கும் மருத்துவமனை சிறப்பு சுகாதார அட்டைகளை வழங்கி அவர்களை மருத்துவமனையில் சுகாதார சேவைகளில் சிறப்பு சலுகை பெற உரிமை வழங்கி உள்ளது .மஹாராஜா குழுமத் தலைவர் .முகமது ரஃபி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இந்தியன் எவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச், தஞ்சாவூர் அருட்தந்தை ஜேக்கப் ஜெயராஜ், பாதிரியார் மற்றும் மீனாட்சி மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) அல்மாஸ் அலி, மீரா பஸ் நிறுவன உரிமையாளர் ஷர்புதீன், பேசிக்ஸ் கடை உரிமையாளர். ரஃபிக்தீன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மீனாட்சி மருத்துவமனையின் மூத்த தணிக்கை மேலாளர் மு.ஹாஜா நஜிமுதீன் நன்றியுரை வழங்கினார். முன்னதாக, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர்.பாலமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு சுகாதார அட்டைகளை மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் சிவக்குமார் வழங்கினார்.
168
You must be logged in to post a comment.