Home செய்திகள் 18வது மக்களவை தேர்தலில் 18+ வாக்களர்களை முழுமையாக வாக்களிக்க அழைத்த 118+ வயது மிட்டாய் தாத்தா !

18வது மக்களவை தேர்தலில் 18+ வாக்களர்களை முழுமையாக வாக்களிக்க அழைத்த 118+ வயது மிட்டாய் தாத்தா !

by Baker BAker

தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது . இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மற்றும் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க வலியுறுத்தி தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் 118 வயது மிட்டாய் தாத்தா மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது . தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உன் கைவிரலில் வைக்கப்படும் மையால் , உண்மையாக , நேர்மையாக , கடமையுடன் , ஜனநாயக உரிமையுடன் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் 100 ஆட்டோக்களில் ஒட்டப்பட்டது . தஞ்சை கீழவாசல் ஆடக்காரத் தெருவில் வசிக்கும் 118 வயது முகமது அபுசலி என்ற மிட்டாய் தாத்தா கொடியசைத்து துவக்கி வைத்த பின்னர் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில் இருந்து தஞ்சை நகர பகுதிகளில் வலம் வந்தன . முன்னதாக அங்கிருந்த பொதுமக்களிடமும் ஆட்டோ ஒட்டுனர்களிடமும் மதிப்புமிக்க வாக்கை பணத்துக்காக விற்காமல் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் , வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் குறிப்பாக 18 வயது நிறைவடைந்து முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்ற இளம் வாக்களார்கள் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் , ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தில் நமது உரிமையை நிலைநாட்டும் என்று இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே நிறைவேற்ற வேண்டி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது . ஜனநாயகத்துக்காக ஆள்காட்டி விரலை கூட உயர்த்தாதவர்கள் அரசை கேள்வி கேட்க உரிமையில்லாதவர்கள் என்பது எங்கள் நிலைப்பாடு . ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் கைகளில் தேர்தல் நாளன்று தங்களது ஆட்காட்டி விரலில் வாக்களிக்க மை வைத்து உண்மையாகவும் நேர்மையாகவும் உரிமையாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றி 100 சதவிகிதம் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தனர் . எதிர்வரும் தேர்தல் , 18வது மக்களவை தேர்தலாகும் . 18 வயது நிறைவடைந்த வாக்களிக்க தகுதி பெற்ற அனைவரையும் 118 வயது மிட்டாய் தாத்தா 100 சதவிகிதம் வாக்களிக்க அழைப்பு விடுத்த நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது . இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர் .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!