Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு..

தென்காசி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு..

தென்காசி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மீது பள்ளி மாணவி அளித்துள்ள புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் வல்லம் பகுதியை சேர்ந்த மம்தி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 11-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியை ரெக்கார்ட் நோட் எழுதி வரவில்லை என்ற காரணத்திற்காக அந்தப் பள்ளியில் உயிரியல் ஆசிரியராக இருந்த ஜெயராஜ் என்பவர் பின்புறமாக பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மம்தி தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், தன்னை கையில் அடிக்குமாறு கூறியுள்ளார். அதற்கு ஆசிரியர் ஜெயராஜ் இரட்டை அர்த்தங்களால் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து, மாணவி அவரது பெற்றோர்களிடம் கூறவே, அவரது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வந்து இது தொடர்பாக புகார் அளித்தனர்.

இந்நிலையில், உயிரியல் ஆசிரியர் ஜெயராஜ் என்பவரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. அந்த பள்ளியில் பயின்று வரும் சக மாணவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட ஜெயராஜ் என்ற ஆசிரியர் தங்களுக்கு திரும்ப வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பள்ளி நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்துள்ளது. இருந்த போதும், அந்த மாணவர்கள் அதோடு விட்டுவிடாமல் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் குரூப் ஒன்று ஓப்பன் செய்து அதில் மாணவி மம்தி குறித்து ஆபாசமாக பேசி உள்ளனர். உடனே மம்தி இது குறித்து அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்து, இது தொடர்பாக புகார் அளிப்பதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்ற நிலையில், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு கிறிஸ்டோபர் என்ற ஆசிரியரை மம்தியின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இந்த நிலையில், இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலின் பேரில் சென்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த நிலையில், மம்தியின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆபாசமாக நடந்து கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை அளித்திருந்தனர். அதேபோல், ஆசிரியர் கிறிஸ்டோபர் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்த நிலையில், இது தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாணவி மம்தி கொடுத்த புகாரின் பேரில், ஆசிரியரான ஜெயராஜ் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஆசிரியர் கிறிஸ்டோபர் அளித்த புகாரின் அடிப்படையில் மம்தியின் உறவினர்கள் 10 பேர் மீது செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் இரட்டை அர்த்தங்களை கூறி அடித்ததாக மாணவி ஒருவர் புகார் கொடுத்து ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!