Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் ரூ.6.60 கோடி மதிப்பில் அரசு கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் திறப்பு..

தென்காசி மாவட்டத்தில் ரூ.6.60 கோடி மதிப்பில் அரசு கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் திறப்பு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் ரூ.6.60 கோடி மதிப்பில் அரசு கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் திறப்பு..

தென்காசி மாவட்டம் சோலைசேரி அரசு கல்லூரி மாணவிகள் விடுதி கட்டடம் மற்றும் அரசு சீர்மரபினர் கல்லூரி மாணவர் விடுதி கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் மற்றும் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஷ்வரி ஆகியோர் துவங்கி வைத்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் வட்டம் சோலை சேரியில் அரசு கல்லூரி மாணவிகள் விடுதி மற்றும் சங்கரன் கோவில் அரசு கல்லூரி மாணவர் விடுதி ஆகிய ரூ.6.60 கோடி மதிப்பிலான விடுதி கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு. சதன் திருமலைக்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் 9523 சதுர அடி பரப்பளவில் ரூ.3.31 கோடி மதிப்பில், அரசு சீர்மரபினர் மாணவர் விடுதிக் கட்டடத்தினையும், சோலைசேரியில் 9523 சதுர அடி பரப்பளவில் ரூ.3.29 கோடி மதிப்பில் அரசு மாணவிகள் விடுதிக்கட்டடத்தையும் திறந்து வைத்தார். மாணவர்கள் விடுதிக் கட்டடத்தில் 120 மாணவர்கள் தங்கும் அளவில் தரைத்தளம். மற்றும் இரண்டு தளங்களுடன் அமைந்துள்ளது. மாணவிகள் விடுதிக் கட்டடத்தில் 100 மாணவிகள் தங்கும் அளவில் தரைத்தளம், மற்றும் இரண்டு தளங்களுடன் அமைந்துள்ளது.

மேலும், இரண்டு விடுதிக் கட்டடங்களிலும் தரைத்தளத்தில் விடுதி காப்பாளர் அறை, அலுவலக அறை, உணவு அருந்தும் அறை, சமையல் அறை, தங்குமிடம், குளியலறை மற்றும் கழிப்பறை, எரிபொருள் மற்றும் பொருட்கள் வைக்கும் அறை என உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் தங்குமிடம், குளியலறை, கழிப்பறை என உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்துள்ளது. மாணவ மாணவியர் தங்களது கல்வித்திறனை மேம்படுத்த அரசு ஏற்படுத்தித் தரும் எல்லா வசதிகளையும் முழுமையாகப் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கி தங்களது பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் (பொ) முருகானந்தம், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, உதவி செயற் பொறியாளர் ஜான் ஆஷிர், உதவி பொறியாளர் சுரேந்தர் பாக்கியநாதன், சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!