தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் 10-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல உப தலைவர் ரெவ சுவாமிதாஸ், குருத்துவ செயலாளர் ரெவ். பாஸ்கர் கனகராஜ், சாந்தபுரம் சேகர தலைவர் ஸ்டேன்லி இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பொ.தங்கம் வரவேற்று பேசினார். திருநெல்வேலி திருமண்டல பேராயர் ஏஆர்ஜிஎஸ்டி பர்னபாஸ் மாணவ ஆசிரியர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். பாளை ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் செல்வக்குமார், இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய், துணைத் தலைவர் முத்தையா, கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், அமிர்தம் செல்லத்துரை, அந்தோணி, திருமண்டல செயற்குழு உறுப்பினர் பால்பாண்டி, கல்லூரி பேராசிரியர்கள் ஷீலா, முத்துலட்சுமி, ஜெயா, ஜெனிபர் ஹெப்சி, அனிதா, நூலகர் டாக்டர் ஏஞ்சலின், உடற்கல்வி ஆசிரியர் ஐசக், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக், பேதுரு, லட்சுமி, புதுச்சுரண்டை சேகர செயலாளர் ஜேம்ஸ் பொருளாளர் ஸ்டீபன் ஜெபராஜா, கிருபாகரன், செல்வக்குமார், ஆபிரகாம், சாம், சாலமோன், ஜெயசந்திரன், பொன்ராஜ், அருண் பிரபாகரன், உன்னத ஜெபகுமார், கிருபா சம்பத், அதிசயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.