இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு-3
(கி.பி 750-1258)
பேரரசர் அபூஜஃபர் அல்மன்சூர் மரணமடைந்து விட்டார்கள் என்று வீரன் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தாலும், தாங்கள் தப்பி போவது இப்போது சிரமம் என்பதால் உமைய்யா இளவரசருக்கு வருத்தம் ஏற்பட்டது.
உடல் அடக்கம் செய்யப்பட்டு அடுத்த அரசர் பதவி ஏற்கும் வரை பாதுகாப்பு அதிகரித்து கெடுபிடி யாக இருக்கும் என்பதால் இப்போது தப்பித்தால் மாட்டிக் கொள்வோம் என்று தப்பிக்கும் திட்டத்தை சில நாட்களுக்கு ஒத்தி வைத்தனர்.
பேரரசர் அபூஜாஃபர் அல்மன்சூர் அவர்கள் 40 வயதில் அரசராக பதவியேற்று 22 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார்.
பேரரசர் ஜாஃபர் பாக்தாத் நகரத்தை அமைதியின் நகரமாக கட்டமைத்தார்.
அதுபோலவே அவரது இறப்பில் பாக்தாத் நகரமே அமைதியாக இருந்தது.அவரது ஜனாஸாவிற்கு பேரரசின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் குவிந்தனர்.
அவருடைய உடல் அடக்கப்பட்டு உடனடியாக அடுத்த அரசராக அவரது மகன் மஹ்தி இப்னு மன்சூர் ஆட்சி பொறுப்பேற்றார்.
சில நாட்களில் நகரம் வழக்கம் போல இயங்கத் துவங்கியது. பேரரசு மிகச்சரியாக கட்டமைக்கப்பட்டு இருந்ததால் அரசாங்க அலுவல்கள் வழக்கம் போல நடைபெற துவங்கின.
பாக்தாத் நகரம் வழக்கம் போல இரவில் அமைதியாக உறங்கத் துவங்கியது. பரப்பரப்புகள் அடங்கிய பின்- நிலாக்காலம். வானத்தில் நிலவின் வெளிச்சம் தாமதமாக வரும் காலம்.
அன்றைய இரவு கருப்பு போர்வையால் மூடியதுபோல கருத்துஇருந்தது. உமைய்யாக்களின் அரசகுடும்பம் தப்பிப்போவதால் இயற்கையும் அதற்கு உதவி செய்தது.
அன்றைய நடுஇரவில் இரண்டிரண்டு பேராக நதியின் முகத்துவாரத்தை நோக்கி நடந்து மறைவுகளில் பதுங்கி கொள்ள வேண்டும்.
படகு கரையின் அருகில் வரும்போது முடிந்தவரை வேகமாக சென்று படகில் ஏறி விடவேண்டும் என்பது திட்டமாக இருந்தது.
படகு இருக்கும் முகத்துவார திசையை நோக்கி நடந்து அதுபோல படகு வந்தவுடன் பதட்டமில்லாமல் ஒருவரோடு ஒருவராக அமைதியாக படகில் ஏறினர்.
சில நாட்களாக ஒரே இடத்தில் இருந்த படகு நகரத்துவங்கியதும் காவல் படகுகள் உமைய்யா படகை நோக்கி வேகமாக வந்தன.
அனைவரும் படகில் ஏறியதும் உமைய்யா படகு அதிவேகத்தில் தங்கள் கப்பல் இருக்கும் கடல்பகுதியை நோக்கி விரைந்தது.
யூப்ரடீஸ் நதியின் அலைகள் கடலை நோக்கி வேகமாக உருண்டோடியதால் மேலும் துடுப்புகளும் வலிக்கப்பட்டதால் படகு அதிவேகமாக கடலை நோக்கி சென்றது.
துரத்திய பாக்தாத் படகுகள் துறத்த முடியாமல் திரும்பவும் கரைக்கே திரும்பிவிட்டன.
படகு நதியின் இறுதிப்பகுதியில் தயாராக இருந்த சிறிய கப்பலின் அருகில் சென்றதும் சிறிய ஏணி தொங்கவிடப்பட்டு அனைவரும் அதில் ஏறினர்.
சிறிய கப்பல் நடுக்கடலில் இருந்த பெரிய கப்பலின் அருகில் சென்றதும் அனைவரும் பெரிய கப்பலில் ஏறிக் கொள்ள கப்பல் ஸ்பெயினை நோக்கி ஓடத் துவங்கியது.
மன்னர் மஹ்தி அவர்களின் காலமும் பெரிய சிறப்புகள் இல்லாமல் உருண்டோடியது. வழக்கமான ஆட்சி அமைப்புகளால் ஆட்சியும் சிறப்பாகவே நடைபெற்றது.
11 வருடங்கள் ஆட்சிசெய்த மஹ்தி இப்னு மன்சூர் அவர்களும் மரணமடைந்தார்கள்.
மஹ்தியின் மகன் மூஸாஹாதி இப்னு மஹ்தி ஒரே வருடத்தில் மரணமடைந்தார்.
அதன்பிறகு மூஸாஹாதி அவர்களின் மகன் ஹாரூன் அர்ரஷீத் அவர்கள் அப்பாஸிய பேரரசின் ஐந்தாவது பேரரசராக பதவி ஏற்றார்கள்.
அப்போது பல அற்புதங்கள் நிகழ்ந்தன..!
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.