பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர்கள் தேர்வு..
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முத்தலைவர்கள் தேர்வு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆலமரம் வட்டாரத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். செயலாளர் சசி ஞானசேகரன், முன்னாள் செயலாளர் R.கலைச்செல்வன் மற்றும் உறுப்பினர் R.அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன் அறிவழகன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஆசிரியர் P. திருமலைக் கொழுந்து, T. சுரேஷ், R. பாண்டியராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 2024-2025 ஆண்டின் புதிய தலைவராக K . ஆனந்த், செயலாளராக K.P தங்கராஜ், பொருளாளராக S.ஜேக்கப் சுமன் ஆகியோரை அரிமா சங்க நிர்வாகி முனைவர் த. அருணாச்சலம் தேர்வு செய்தார். பொருளாளர் Dr K.S. சினேகா பாரதி நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.